
இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்முனை விகராதிபதி ரன் முத்துகல சங்கரத்தின தேரரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள விகராதிபதியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்ததுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இன்னும் இரு தினங்களில் தரம் உயர்த்த தவறினால் பாரிய போராட்டம் ஒன்றை கல்முனையில் மேற்கொள்ள ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி அண்மைக்காலமாக பலரும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இன்று இந்த சாகும்வரையான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.