
வேல்வெட்டித்துரை பொலிஸாரினால் மோட்டார் சைக்கிளினை நிறுத்தி சோதனை செய்ய சென்ற பொழுது சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் மற்றும் பொதியினை விட்டு தப்பியோடியுள்ளதாக பொலிஸார் க்ரிவிக்கின்றனர்.
குறித்த பொதியினை சோதனைக்குற்படுத்தப்பட்ட போது அதில் 30 கிலோ, 254 கிராம் கேரள கஞ்சா இருந்துள்ளது.
தப்பியோடிய சந்தேக நபரினை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் வேல்வெட்டித்துரை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.