
அதனடிப்படையில் சந்தேகத்ன் பேரில் இரும்புக் கம்பியினால் கட்டப்பட்ட கார்ட்போட் பெட்டியொன்றினை பொலிஸார் கண்டெடுத்துள்ளதோடு, அம்பலாந்தோட்டை மற்றும் அம்பாந்தோட்டை பொலிஸ் விசேட பிரிவினருக்கு தகவல் அனுப்பட்டுள்ளது.
விசேட பொலிஸ் பிரிவினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மேற்கொண்ட பரிசோதனைகளின் போது யாரோ ஒருவரினால் மக்களை பீதியடையச் செய்ய மேற்கொண்டதென கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி இ.போ.ச பஸ் வண்டி போக்குவரத்தி நேரத்தின் பின்னர் தினமும் இவ்விடத்தில் நிறுத்தி வைப்பதாகவும், பஸ் வண்டியின் கதவுகள் சரியான பாதுகாப்பில் இல்லை எனவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்தது.
எவ்வாறாயினும் இந்த நாசகார வேலையினை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.