
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே நடாத்தப்பட்ட சோதனையின் போது நேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் ஒன்றரை கிலோ கிராம் இரும்பு பந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டிருந்த இருவரும் பண்டாரவலை - போகஹகும்புர பிரதேசத்தை சேர்ந்தவர்களாவார்.
42 மற்றும் 44 வயதுகளையுடைய சந்தேக நபர்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

