
மீண்டும் சந்தர்ப்பம் வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் ஆணைக்கிணங்க இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மொரகஹகந்த திட்டத்தின் மக்கள் பிரதிநிதி பீ. ஜீ. தயானந்த அவர்கள் தெரிவித்தார்கள். .
நடைபெற்றிருந்த பாதுகாப்பற்ற சூழ் நிலை காரணமாக மொரகஹகந்த நீர்த்தேக்கத்தினை பார்வையிடும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.
நீர்த்தேக்கத்தினை பார்வையிட வருபவர்கள் விசேட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டும், வாகனங்கள் நீர்த்தேக்க வலாகத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்ட வேண்டும் எனவும் பீ. ஜி. தயானந்த அவர்கள் தெரிவித்தார்கள்.
எவ்வாறாயினும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தினை பார்வையிட வரும் அனைவரும் மக்கள் பிரதி காரியாலத்திற்கு சென்று அங்கு காண்பிக்கப்படும் காணொளியினை பார்த்து, விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களுடன் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கான அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக் கொள்வது அவசியமானதாகும்.

