
கைது செய்யப்பட்ட சாரதி கபூரை மேலதிக விசாரிகளுக்காக குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறிப்பிட்ட சந்தேக நபர் கொழும்பிலிருந்து காத்தான்குடி செல்லும் வழியில் பஸ்ஸில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தாக்குதல்களை மேட்கொள்ளவதற்கான திட்டங்கள் போடப்பட்ட நான்கு வீடுகளை பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
குறிப்பிட்ட வீடுகள் சம்மாந்துறை, சாய்ந்தமருது மற்றும் நிந்தவூரில் அமைந்திருப்பதாக தெரிவித்தார்.