குளத்தடியில் மாட்டை குளிப்பாட்டியவருக்கு நேர்ந்த பயங்கர சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குளத்தடியில் மாட்டை குளிப்பாட்டியவருக்கு நேர்ந்த பயங்கர சம்பவம்!

குளத்தில் மாட்டை குளிப்பாட்டிக்கொண்டு இருந்தவரை முதலை கடிதத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், மட்டுவில் கிழக்கை சேர்ந்த நாகநதி கிருஷ்ணமூர்த்தி (வயது 58) என்பவரே படுகாயமடைந்தவராவார்.

குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள வயல் குளத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14) மாடுகளை குளிப்பாட்டிக்கொண்டு இருந்த வேளை குளத்தில் இருந்த முதலை அவரது தொடை பகுதியை கெளவி பிடித்துள்ளது.

உடனே விரைந்து செயற்பட்ட அவர் முதலையின் தாடைப் பகுதியை கைகளால் இழுத்து பிழந்து முதலையை தூக்கி குளத்திற்கு வெளியே வீசியுள்ளார்.அதன் பின்னர் தொலைபேசி ஊடாக உறவினர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனை அடுத்து அங்கு விரைந்த உறவினர்கள் அவரை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.