
டவுன் டிடெக்டர் (Down Detector) வலைத்தளத்தின்படி, பேஸ்புக் உலகம் முழுவதும் சுமார் இன்று (14) மாலை 4.00 மணி (இலங்கை நேரம் படி) முதல் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
பேஸ்புக் சேவை கிடைக்காத நிலையில், பயணர்கள் டுவீட்டர் பக்கத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
2018 டிசம்பர் கணக்கெடுப்பொன்றின் படி உலகெங்கிலும் 2.3 பில்லியன் பயணர்கள் பேஸ்புக் உபயோகத்தில் உள்ளனர். மேலும் பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம் மற்றும் பேஸ்புக் மெஸஞ்சரை சொந்தமாகக்கொண்டது அனைவரும் அறிந்ததே.
மேலும் இச்செயலிழப்பு பற்றிய ஆயிரக்கணக்கான விமர்சணங்கள் எழுந்துள்ளன.
கடந்த 2019 மார்ச் 14ஆம் தேதி கடைசி பிரதான செயல்திறன் பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம் மற்றும் Oculus தளங்கள் உலகலாவியரீதியில் செயலிழந்தது.

