
மாத்தளை, வில்கமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்று (14) மாலை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில் சாலையை விட்டு விலகிய வண்டி மரமொன்றில் மோதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் படுகாயமடைந்த ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் வெஹெரளகம பகுதியை சேர்ந்த 36 வயது நபர் என போலீசார் தெரிவித்தனர்.

