
பந்தினை பழுதாக்கிய குற்றச்சாட்டில் விளையாட தடைபிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவின் ஸ்மித் மற்றும் முன்னாள் உப தலைவர் டேவிட் வோர்னர் அவுஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ளனர்.
உலகக் கிண்ண போட்டிகளின் போது அணித்தலைவராக எரோன் பின்ச் பெயரிடப்பட்டுள்ளார்.
ஜேசன் பெஹெண்டோர்ப், எலக்ஸ் கேரி, நேதன் கூட்டனைல், பெட் கமின்ஸ், உஸ்மான் கவாஜா, நேதன் லயன், ஷொன் மாஷ், க்லென் மெக்ஸ்வெல், ஜோய் ரிச்சட்சன், மிச்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் எடன் சம்பா ஆகியோர் 2019 உலகக் கிண்ண ஒரு நாள் போட்டித்தொடரில் விளையாட அவுஸ்திரேலியா அணி சார்பாக இடம் பிடித்துள்ளனர்.

எவ்வாறாயினும் தற்பொழுது தனது திறமையினை வெளிப்படுத்திய பூட்டர் ஹென்ஸ்கொம்ப் மற்றும் ஜொஷ் ஹெஸ்ல்வுட் ஆகியோர் அவுஸ்திரேலியா அணியில் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிடத்தக்கது.
மேலும் எஷ்டன் டர்னர், மெதிவ் வேட் மற்றும் டார்ஸி ஷோட் ஆகியோரும் இம்முறை உலகக் கிண்ண வாய்ப்பினை இழந்துள்ளனர்.