
எவரெஸ்ட் பிராந்தியத்திற்கு முக்கிய நுழைவாயிலாக இருக்கும் லுக்லா விமான நிலையத்தில் விமான ஓடுபாதையை விட்டு விலகிய விமானம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு நிலையான ஹெலிகாப்டரை மோதியுள்ளது. விபத்தில் விமானி மற்றும் ஹெலிகாப்டர் அருகே நின்று கொண்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.
இந்த ஓடுபாதை குறுகியதாகவும், மலைகளால் சூழப்பட்டதாகவும் உள்ளது. இதனால் புறப்படுவது மற்றும் இறங்குதல் ஆகியவை மிகவும் கடினம். விபத்துக்குள்ளான இரு விமானங்களும் எவரெஸ்ட் பிராந்தியத்திற்கு ஏறுவோர், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை ஈடுபடுத்தும் நிறுவனங்களுக்கு சொந்தமானது.
சனிக்கிழமை (13) இடம்பெற்ற இவ்விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. வானிலை நன்றாகவே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.