பலத்த காற்று - வவுனியாவில் 30 வீடுகளுக்கு சேதம் (படங்கள் இணைப்பு)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பலத்த காற்று - வவுனியாவில் 30 வீடுகளுக்கு சேதம் (படங்கள் இணைப்பு)


சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நேற்று (28) பலத்த காற்று வீசியதால் வவுனியா மாவட்டத்தில் 30 இற்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன.

வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் 20 வீடுகளும், மற்றுமோர் பிரதேசத்தில் 10 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்தது.

பணிக்கங்குளம் பிரதேசத்தில் தற்காலிகமாக 15 வீடுகளும், நிரந்தர வீடுகள் ஐந்தின் கூரைகளும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்தது.

மேலும் வவுனியா மாவட்டங்களில் ஏராளமான இடங்களில் பலத்த காற்றுடன், கடும் மழையும் பொழிவதாக ஊர்வாசிகள் தெரிவித்தனர்.





Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.