
விண்ணப்பதாரர் 2017 டிசம்பர் க . பொ . த . ( சா . த ) பரீட்சைக்கு தோற்றி குறைந்த பட்சம் 3A உடன் கணிதம் , இஸ்லாம் பாடங்கள் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.
இத்தகுதியினை உடையவர்கள் உங்கள் பகுதிகளில் இயங்கும் வை . எம் . எம் . ஏ . களில் இருந்தும் அல்லது www.ymma.lk என்ற இணையத்தளம் மூலமாகவும் https://www. facebook.com/YmmaConference என்ற முகப்புத்தகம் ( ஊடாகவும் விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் ( Download ) செய்தும் பெற்றுக்கொள்ளலாம்கு.
குறிப்பு : இப்புலமைப்பரிசில் ஸகாத் நிதியினூடாக வழங்கப்படுகின்றது என்பதை கவனத்தில் கொள்ளவும் . விண்ணப்பப்படிவங்களை ஒழுங்கான முறையில் பூர்த்திசெய்து அதில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் போட்டோ பிரதிகளுடன் இலங்கையிலுள்ள அங்கத்துவ வை . எம் . எம் . ஏ களில் உறுதிசெய்யப்பட்டு எதிர்வரும் 31.03.2019 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்காணும் முகவரிக்கு கிடைக்கக் கூடியதாக தபால் மூலம் அனுப்பிவைக்கவும்.
( அனுப்பும் கடித உறையில் இடது பக்க மூலையில் Y - Scholarship - Application என்று குறிப்பிடவும்)
NATIONAL GENERAL SECRETARY,
ALL CEYLON YMMA CONFERENCE,
NO. 63, SRI VAJIRANGNANA MAWATHA,
COLOMBO 09.

