குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்திற்குள்ளாக்கப்பட்டால் சாரதியின் சாரதி அனுமதிபத்திரம் ரத்து செய்யப்படும் என உப பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண அவர்கள் தெரிவித்தார்கள். இது சம்பந்தமான சட்ட நடவடிக்கைகள் திருத்தியமைக்கபடும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இரவு நேர விடுதிகளுக்கு அண்மித்த பிரதேசங்களில் குடிபோதையில் வாகன சாரதிகள் கைது செய்யும் நடவடிக்கை நேற்று (11) இலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை அறிவித்தது.