
கடந்த புதன் கிழமை (20) பெலிஅத்த போலிஸ் பிரிவுக்குற்பட்ட பல்அத்தர தெபொக்காவ மொதராவலை பிரதேசத்தில் அவரின் வீட்டினுள் துப்பாக்கி சூட்டிற்குள்ளான இவர் பலத்த காயங்களுடன் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததோடு இன்று அதிகாலை இவரின் உயிர் பிரிந்ததாக தகவல் அறியக் கிடைத்தது. எவரால் இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது என இன்னமும் வெளிப்படவில்லாத காரணத்தால் பெலிஅத்த பொலிசார் மேற்கொண்டு விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.