
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகள் தொடரில் எஞ்சிய இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து இலங்கை துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா நீக்கப்பட்டார்.
28 வயதான குசல் பெரேரா டர்பனில் நேற்று (10) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் தொடை எலும்பு காயம் ஏற்பட்டதை தொடர்ந்தே எதிர்வரும் போட்டிகளில் இருந்து ஒதுக்கப்பட்டார்.
எவ்வாறாயினும் இலங்கை கிரிக்கெட் சபை எந்தவொரு மாற்று வீரரையும் அனுப்பப்போவதில்லை என தெரிவித்தது. இதனடிப்படையில் நாங்காம் ஒரு நாள் போட்டியில் உப்புல் தரங்க மற்றும் தனஞ்சய த சில்வா ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் மீதியிருக்கும் ஒருநாள் போட்டிகளில் நான்காவது போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி போர்ட் எலிசபெத் மைதானத்திலும், கடைசிப்போட்டி 16ஆம் திகதி கேப் டவுன் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.