
சவூதி அரேபியாவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணித்த விமானத்திலேயே சம்பவம் நேர்ந்துள்ளது. மேலும் இவர் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்ததாக அறியக்கிடைத்தது.
இன்று அதிகாலை 4.35 மணியளவில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-282 யிலேயே உயிரிழந்த பெண் பயணித்திருக்கிறார்.
மேலும் குறிப்பிட்ட பெண்ணின் உடலை மேல் விசாரணைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதித்ததாக போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.