துப்பாக்கிச் சூட்டில் தாக்கப்பட்ட சகோதரர் தஸ்லீம் - புரிதலும் யதார்த்தமும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துப்பாக்கிச் சூட்டில் தாக்கப்பட்ட சகோதரர் தஸ்லீம் - புரிதலும் யதார்த்தமும்!

மாவனல்லை தனாகமைக் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட சகோதரர் எம்.ஆர்.எம் தஸ்லீம் அவர்கள் இனம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருக்கிறார். அவர் தற்போது கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்பட்டுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக விஷேட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உளவுப்படையினர் குற்றவாளிகளையும் குற்றத்திற்கான பின்னணியையும் கவனமாக தேடிவருகின்றனர்.

இந் நிலையில் சமூக வளைத்தளங்களும் மற்றும் சில ஊடகங்களும் பிழையான குற்றப்பின்னணிகளை ஊகித்து தமது ஊடகப் பெருமையை காட்ட வேண்டும் என்ற பேராசையில் பிழையான தகவல்களை பரிமாறி மக்கள் எதிர்பார்ப்பை கலங்கப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இத்தகைய பிழையான ஊகிப்புக்கள் குற்றத்தின் பின்னணியை வேறு திசையில் திருப்பவும் தமது சுய நலன்களை பாதுகாத்துக் கொள்ளவுமே முன்வைக்கப்பட்டு வருவதில் பொதுமக்கள் தெளிவு பெற வேண்டும்.

சகோதரர் தஸ்லிமை பொருத்தவரை தமது 38 வருட வாழ்க்கையில் சரிபாதி சமூகத்துக்காகவே கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தனாகமை மஸ்ஜிதுல் ஹகம் ஜும்மா பள்ளிவாயலில் பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ள அவர் தனது 18வது வயதில் இருந்தே தன்னை சமூகத் தொண்டனாக அறிமுகப்படுத்தி ஊர் பள்ளிவாயலின் நிர்மாணப் பணியிலும் அபிவிருத்திப் பணியிலும் நிர்வாக பொறுப்புகளிலும் இருந்து காத்திரமான பணிகளை ஊருக்காகவும் மாவனல்லை பிரதேசத்துக்காகவும் செய்து வருகிறார் என்பது மக்கள் வாக்காகும்.

மேலும் ஊரின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வசதி அற்றோருக்கான உதவிக் கரங்கள் இன்னும் ஊரின் விஷேட நிகழ்ச்சி நிரல்கள் என பல ஏழைகளின் கண்ணீர்களை துடைத்து பல மனிதர்களின் மனதுக்கு ஆறுதல் கொடுத்து ஊரின் பெயரையும் உயர்வையும் மேம்படுத்துவதில் இவரது சேவை இன்றியமையாதது ஆகும்.

மேலும் தனாகமை கிராமத்தில் பெரியவர்கள், சிறியவர்கள் வாலிபர்கள் என எல்லோரிடத்திலும் சிரித்து பழகுகின்ற இயல்புடையவர். அவர் ஊரில் யாருக்காவது பிரச்சினை அல்லது கஷ்டம் என்று வருகின்ற போது முன்னின்று கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுக்கின்ற ஆச்சரியமான மனிதர் என்பதற்கு ஊரே சாட்சியாகும். நட்பாக பழகுகின்ற அவரது குணமும் தெளிவாக பேசுகின்ற அவரது பேச்சும் எல்லா மனிதர்களினதும் உண்மையான நேசத்தையும் பாசத்தையும் கொண்டுள்ளதை நேற்றைய தினம் கண்களால் பார்க்கக்கூடியதாக இருந்தது.

சம்பவம் நடந்த இடத்துக்கு குழுமிய மக்கள் கூட்டம் தமது வார்த்தைகளாலும் கண்ணீராலும் ஆதங்கங்களாலும் வெளிப்படுத்தியமை அவர், பயனுள்ள மனிதராக மனிதர்களுள் வாழந்து கொண்டிருக்கிறார் என்பது தின்னமாகும்.

அவரது குடும்பத்தினரின் மன அமைதிகாக்கவும். மேலும் அவரது நல்லாரோக்கியத்துக்காகவும் ஊரே நோன்பு நோற்று பிரார்த்திக்க முடிவு செய்யப்பட்டு இருக்கும் இத் தருவாயில் இத் தெளிவைப் பெற்று மனமுறுகிய உள்ளங்களும் அவரது ஆரோக்கியத்திற்காக பிரார்த்திக்குமாரும் வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.

இப்படிக்கு ,
நிர்வாகம் மஸ்ஜிதுல் ஹகம் தனாகம,மாவனல்லை.

-மனாஸ்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.