
மொனராகலை போலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹொரம்புவ சுதுவத்துர ஆர விதியில் வாகனமொன்று தீ மூட்டியதன் விளைவாக ஒருவர் உயிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (22) நள்ளிரவு 12:45 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கெலேபெத பிரதேசத்திலேயே இந்த கெப் ரக வண்டி தீ மூட்டப்பட்டதோடு, வாகனத்தில் சென்ற நபர் தீக்காயங்களுக்குற்பட்டு இறந்துள்ளதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்ப்டையில் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றன.
இவ்வாறு உயிரிழன்ந்த 50 வயதுடைய நபர், டிப்போ வீதி, ஹுலங்தாவ, மொனராகலை பிரதேச வனசிங்க குருகே சந்தன புஷ்பகுமார என்பவராவார் ர்ன பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று (21) மாலை 6 மணியளவில் தன் மனைவியுடன் சண்டையிட்டு கெப் ரக வண்டியில் இவர் சென்றுள்ளார் என தகவல் அறியக் கிடைத்தது.
உடல் கராப்பிட்டிய வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.