
இன்றைய (21) கொழும்பு மேல்நீதிமன்ற விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பித்தல்களை கருத்தில் கொண்டு, நீதவான் ஷலனி பெராரா சந்தேக நபரை மேலும் ஏப்ரல் 04 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இலங்கை கடற்படையின் முன்னாள் லெப்டினென்ட் கமாண்டராக செயற்பட்டவர், 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்களை காசுக்காக கடத்தி கொலை செய்தமைக்கான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.