
நேற்று (25) இரவு 07:00 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த 34 வயதுடைய காவற்படை அதிகாரி ஆர். எம். அனுர பண்டார எனும் கந்தகெட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
மேற்படி விபத்தில் இறந்த அதிகாரி மோட்டார் சைக்கிளில் தன் இல்லத்தினை நோக்கி பிரயாணம் செய்து கொண்டிருக்கையில் பூம் ட்ரக் ஒன்றுடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட பூம் ட்ரக் சாரதி பதுளை பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, மேற்கொண்டு விசாரணைகள் நடாத்தி வருகின்றனர்.

