
நேற்று முன்தினம் இரவு வவுனியா மணிக்கூட்டுக்கோபுரத்துக்கு அருகில் பணப்பை தவறியுள்ளது. வவுனியா புதிய பேருந்து நிலையப்பகுதியிலுள்ள போக்குவரத்துப் பொலிஸார் தமது சோதனை நடவடிக்கையின்போது வியாபாரியை வழிமறித்துள்ளனர்.
இதன்போதே பணப்பை தவறியுள்ளது தெரியவந்துள்ளது. பொலிஸாரும் இணைந்து பணப்பையைத்தேடியலைந்தபோதிலும், பணப்பை, ஏனைய ஆவணங்கள் எவையும் கிடைக்கவில்லை. பொலிஸாரின் ஆலோசனைக்கு அமைய வியாபாரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுவிட்டுச் சென்றுள்ளார்.
கடமை முடிந்து வந்த அந்தப் போக்குவரத்துப் பொலிஸார் வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்னால் பணப்பையை கண்டெடுத்தனர்.பணம், ஆவணங்கள் இருப்பதை அவதானித்தனர். நேற்றுக் காலை வியாபாரிக்குத் தகவல் வழங்கினர். அவர் தவறவிட்ட 35ஆயிரத்து 640 ரூபா பணம் உள்ளிட்ட வாகனத்தின் ஆவண்ங்கள் அனைத்தும் வியாபரியிடம் ஒப்படைக்கப்பட்டது.