
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவருமான ஐ.எல்.எம்.மாஹீரின் முயற்சியினால் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் 36 மில்லியன் நிதியில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் மாவத்தை, சம்மாந்துறை கல்லரிச்சல் சிறுவர் பூங்கா, கைகாட்டி சிறுவர் பூங்கா என்பனவற்றை பொது மக்கள் பாவணைக்கு திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம்(10) சம்மாந்துறை கைகாட்டிச் சந்தியில் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த வருடம் தேர்தல் வருடமாகும். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்கனவே நடைபெற வேண்டிய தேர்தலை காலம் தாழ்த்தினாலும் இவ்வருடக் கடைசியில் ஜனாதிபதித் தேர்தலையாவது நாட்டு மக்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. தேசிய ரீதியாக ஒரு தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும்.
இந்நாட்டினுடைய அரசியல் போக்கினை சிறுபான்மை சமூகமாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடைய ஒற்றுமையினால் மாற்றியமைக்க முடியும். அரசியல்வாதிகளின் தனிப்பட்ட போக்கினால் இவ்விரண்டு சமூகங்களும் பிரிந்து விடக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் சண்டைபோடுவதற்கு முதல் எங்களுக்குள் பேசிப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி
சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்