
தலைமன்னார் இலிருந்து 5 மைல்கள் தூரத்தில் நடுக்கடலிலில் நடாத்தப்பட்ட அதிரடி தேடுதலின் போது பீடி இலை அடங்கிய 27 மூட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது, ரோந்து படகினூடாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்து வர முயன்ற நிலையில் என்று சந்தேகிக்கின்றனர்.
மேற்படி சந்தேக நபர்க்ள் மற்றும் பீடி இலைகள் நேற்றிரவு(20) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர் என தகவல் அறியக் கிடைத்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 32 மற்றும் 38 வயதுகளையுடைய மன்னார் பேசாலஒ பிரதேசவர்கள் எனவும், கைப்பற்றப்பட்ட பீடி இலை மூட்டைகள் மற்றும் நபர்களின் அடுத்த கட்ட பரிசோதனைக்காக யாழ்ப்பாண சுங்க அதிகாரிகள் காரியாலத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.