
இந்த தங்க ஆபரணங்ளை அவர்களின் வாய்களினுள்ளும், உடைகளினுள்ளும், பொதிகள் தள்ளும் விமான நிலைய தள்ளு வண்டிகளினுள்ளும் மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் போது 59 தங்க துண்டுகள் கைப்பற்றப்பட்டதுடம் அதன் பெறுமது மூன்று கோடியே தொன்னூற்றிரண்டு இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களில் மூவர் இலங்கையர்கள் எனவும், ஆறு பேர் இந்தியர்கள் எனவும் இனங்காணப்பட்டனர். இலங்கையர்கள் மூவரும் வவுனியா, கண்டி மற்றும் கடுகண்ணாவையை சேர்ந்தவர்களும், இந்தியர்கள் ஆறு பேரும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களுமாகும்.