
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி பெங்களூரு அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. பங்களூரு அணி 17.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அதிக பட்சமாக பெங்களூரு அணி சார்பாக பார்திவ் பட்டேல் 35 பந்துகளில் 29 ஓட்டங்களை பெற்று கடைசியாக ஆட்டமிழந்து சென்றார். சென்னை அணி சார்பாக இம்ரான் தாஹிர் அதிரடியாக பந்து வீசி 4 ஓவர்களில் 9 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார். மற்றும் ஹர்பஜன் சிங் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
20 ஓவர்களில் 71 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி முதல் ஆறு ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு சிறிது தடுமாறிய போதிலும் சென்னை அணி சார்பாக அதிகபட்ச ஓட்டமாக அம்பட்டி ரயுடு 42 பந்துகளுக்கு 28 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 17.4 ஓவர்களில் மூன்று விக்கட்டுக்கள் இழந்த நிலையில் சென்னை அணி வெற்றி இலக்கை அடைந்தது. பெங்களூர் அணி சார்பாக யுஸ்வேந்தர் சஹால் 4 ஓவர்களில் 6 ஓட்டங்கள் மாத்திரமே கொடுத்து ஒரு விக்கட்டை கைப்பற்றியிருந்தார்.

