
இடியுடன் கூடிய மழை பொழியும் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடியதாக இருப்பதனால், அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டல திணைக்களம் மக்களிடம் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள்.
மேலும் காலி இலிருந்து அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவொல்லிருந்து மட்டக்களப்பு வரையுள்ள கடலோர பிரதேசங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடிய சாத்திதக்கூறுகள் இருப்பதாகவும் வளிமண்டல திணைக்களம் அறிவித்தது.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலினாகிய கடலோரங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும்.
நாட்டின் எல்லா கடலோர பிரதேசங்களிலும் ஈசான திசையில் காற்று மணித்தியாலத்திற்கு 20-30கி. மீ. வேகத்தில் வீசும் எனவும் வளிமண்டல திணைக்களம் தெரிவித்தது.
மேலும் காலியிலிருந்து அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஆகிய கடலோர பிரதேசங்களில் மணிக்கு 40 கி. மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் திணைக்களம் அறிவித்தது.
இடியுடன் கூடிய மழை நாட்டின் எல்லா பாகங்களிலும் எதிர்ப்பார்க்கலாம் எனவும் தற்காலிக பலத்த காற்றும் வீசக்கூடும். கடலோர பிரதேசங்களில் பலத்த காற்றினையும் எதிர்ப்பார்க்கலாம்.

