
நேற்று (18) பகல் 01:30 மணியளவில் பொலன்னறுவை பொலிஸ் தொகுதி கதுர்வெல பிரதேசத்திலேயே இந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பொலன்னறுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலினை தொடர்ந்து, குடிவரவு மற்றும் குடியகல்வு விதிகளை மீறி சுற்றுல வீசாவுடன் நாட்டிற்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபட்டதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட வாலிபர் 20 வயதுடைய இந்தியர் என பொலிஸ் நிலையம் அறிவித்தது.
சந்தேக நபர் இன்று (19) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
இது தொடர்பாக பொலன்னறுவை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

