
சவூதி அரேபுயாவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு (valley of the child) அருகே இறந்த கழுகு ஒன்றை ஒருவர் கண்டெடுத்துள்ளார். அதன் மேல் ஒரு கண்காணிப்பு சாதனம் (GPS) இருப்பதை அவதானித்துள்ளார். துல்லியமான ஆய்வின்பின் அந்த சாதனத்தில் உரிமையாளரின் மின்னஞ்சல் பதியப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளார்.


இதில் முக்கிய காரணம் கழுகு ஒரு Thermic wind flyers ஆக இருப்பதாகும்.
Thermic wind flyers எனப்படுவது சூடான காற்றை ஆதரமாகக்கொண்டு மேல் செல்லும் ஆற்றல் உடையது. இதுவொரு சக்தி சேமிப்பு முறை (Energy Saving Method) என விலங்குகள் அறிவியல் துறையில் அறியப்படுகிறது. இதன் விளைவாக சிறகடிக்க பயன்படும் சக்தி முழுவதையும் இச்செயல்முறை மூலம் சேமிக்க முடியும்.
மேலும் நிலம் சூரியனின் சக்தியால் நீரை விட விரைவாக வெப்பமடையக்கூடியது, இதன் விளைவாக, வான்வழி வாயு வெப்பமடைந்து மேலே செல்கிறது, ஆனால் கடல் அல்லது நீர் வழியாக வெப்பமாகும் தன்மை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.
இதனால், கழுகுகளுக்கு கடல் மேட்பரப்பில் பயணிப்பதை விட தரையின் மேல் பயணிப்பது இலகுவாக இருக்கும். மேலும் அவைக்கு தரை மேல் பயணிக்கும் போது தாகத்தை தீர்த்துக்கொள்ள மற்றும் இளைப்பார போன்றவைகளை காரணிகளாக கொள்ளலாம்.