
தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் தென் ஆபிரிக்க அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இரண்டாம் ஓவரிலேயே முதல் விக்கட்டை இசுரு உதானவுக்கு தென் ஆபிரிக்க வீரர் மர்க்ரம் பரிக்கொடுத்தார். இருப்பினும் இலங்கைக்கு எதிரான இரண்டாம் விக்கட்டுக்காக அதி கூடிய ஓட்டமாக 116 ஓட்டங்களை ரீஸா ஹென்ரிக்ஸ், வெண்டர் டுசான் ஜோடி பெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 180 ஓட்டங்களை தென் ஆபிரிக்கா அணி குவித்தது.
181 என்ற இலக்கை நோக்கி வந்த இலங்கை அணி முதல் பவர் ப்லே இலேயே 4 விக்கட்டுக்களை இழந்தது. அவிஷ்க பெர்ணாண்டோ இம்முறையும் பிரகாசிக்க தவறினார். அதிரடியா தனது துடுப்பாட்ட திறமையினை வெளிப்படுத்திய இசுரு உதான ஆட்டமிழக்காமல் ஆறு சிக்சர்கள் அடங்களாக 84 ஓட்டங்களை பெற்ற போதும் அவருக்கு சரி சமமாக யாரும் துடுப்பாடாத காரணத்தால் 20 ஓவர் முடிவில் இலங்கை அணியினால் 9 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 164 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
தென் ஆபிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரொன்றை வென்ற் ஆசிய அணியாக இருந்த போதும், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளையே தழுவி வருகிறது. ஒரு நாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கில் தொடரை தென் ஆபிரிக்கா அணி வென்று , இருபதுக்கு20 போட்டித் தொடரை மீதம் ஒரு போட்டி எஞ்சியிருக்க 2-0 என்ற கணக்கில் தொடரை தன்வசமாக்கிக் கொண்டது.
இறுதி போட்டி வரும் ஞாயிறு(24) இலங்கை நேரப்படி மாலை 06 மணிக்கு ஜொஹன்னஸ்பேர்க் விளையாட்டரங்கில் ஆரம்பமாக உள்ளது.