
இன்று (19) காலை 08:30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
சுற்றுலா சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றிற்கு பின் புறமாய் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.
விபத்துக்குள்ளாகிய இரு பஸ் வண்டிகளும் தங்காலை நோக்கி அம்பாந்தோட்டையிலொருந்து பிரயாணம் செய்கையில், இலங்கை போக்குவரத்து பஸ் வண்டி பயணி ஒருவரை ஏற்றுவதற்காக திடீரென நிறுத்தியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு விபத்துக்குள்ளாகி இருக்கும் காலி மகிந்த வித்தியாலய மாணவர்களை சுற்றுலாக்காக காலை 5 மணியளவில் காலியிலிருந்து புறப்ப்ட்டு அம்பாந்தோட்டையில் பல இடங்களை பார்வையிடுத்ற்காக இருந்தார்கள்.
விபத்துக்குள்ளாகிய பஸ் வண்டியினுள் இருந்த இரு ஆசிரியர்கள் சிறு காயங்களுடன் அம்பாந்தோட்டை பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பலந்தோட்டை பொலிச் நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

