பல மில்லியன் ரூபாய் வாகன மோசடி! தேடப்பட்டுவரும் ரபீக் முகமது பாரிஸ்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல மில்லியன் ரூபாய் வாகன மோசடி! தேடப்பட்டுவரும் ரபீக் முகமது பாரிஸ்!

பல மில்லியன் ரூபாய் வாகன மோசடி தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


காவல்துறையின் தகவலின்படி, 2020 ஆகஸ்ட் மாதம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து 1.65 கோடி ரூபாய் மதிப்புள்ள SUV வாகனத்தை இந்தக் குற்றவாளி திருடியுள்ளார்.


மேலும், 2023 டிசம்பர் மாதம் வாகனம் வழங்குவதாகக் கூறி 1.25 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார்.


பல மொழிகளில் பேசும் திறன் கொண்ட இந்தக் குற்றவாளி, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ சின்னத்தைப் பயன்படுத்திய வாகனங்களில் பயணிப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.


சந்தேக நபரின் விபரங்கள் :

பெயர் – ரஃபிக் மொஹொமட் ஃபாரிஸ்

தேசிய அடையாள அட்டை இலக்கம் – 761850466V

பிறப்பு – 1976.07.03 


தற்போது குற்றவாளி அப்பகுதியில் இருந்து தப்பியுள்ள நிலையில், அவரது இருப்பிடம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், காவல்துறையின் உதவி எண்களான 071-8591735 அல்லது 071-8596507 ஐத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.