அம்பலாங்கொடை, காலி வீதி உறவத்த பகுதியில் இன்று (10) நண்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அம்பலாங்கொட, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வசிக்கும் கணவன் மனைவி இருவருமே மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.