வெளிநாட்டு பிரஜைகளைக் குறிவைத்து நடாத்தப்பட்டு வந்த பெரும் ஒன்லைன் நிதி மோசடி ஒன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் கிரைம் பிரிவு கண்டுபிடித்துள்ளதுடன் குறித்த மோசடிகளை நடாத்திய நிறுவனத்தின் இரண்டு தலைவர்கள் உட்பட 59 நபர்களையும் கைது செய்துள்ளது.
சந்தேகநபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (08) கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டு பிரஜைகளிடமிருந்து குறித்த குழு சுமார் ரூ. 300 மில்லியன் வரை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உறுதியளித்து உள்ளுர் நிறுவனம் ஒன்று கொரிய பிரஜை ஒருவரிடம் ரூ.300 மில்லியன் பணமோசடி செய்துள்ளதாக தென் கொரியத் தூதரகம் முறைப்பாடொன்றைப் பதிவு செய்ததன் பின்னர் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
ஹெவ்லொக் வீதியிலுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இந்த மோசடி நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் அங்கு 23 பெண்கள் உட்பட 59 இலங்கையர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.
சந்தேக நபர்கள், அவர்களில் சிலர் பன்மொழி பேசுபவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்ற போர்வையில் முதலீட்டாளர்களை குறிவைக்க பணியமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. நிதி என்ன செய்யப்பட்டது என்பது தெரியாமல் பணியமர்த்தப்பட்டதால், இந்த மோசடி குறித்து தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
விசாரணையைத் தொடர்ந்து, நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் முகாமையாளர் கைது செய்யப்பட்டதில், கட்டிடம் 9 மில்லியன் ரூபாய்க்கு வாடகைக்கு விடப்பட்டது தெரியவந்தது. முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட போலி ஆவணங்களையும் இருந்து கணினிகளில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இயக்குனர் மற்றும் முகாமையாளரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், பிறர் தலா 1 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.