முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தமது 74வது வயதில் காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (28) அதிகாலை அவர் உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதிக் கிரியைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
குமார வெல்கமவுக்கு சுகயீனம் ஏற்பட்டமையினால் மூன்று மாத விடுமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.