வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளையும் காணவில்லை என வவுனியா பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் காணாமல் போன பெண்ணின் கணவர் கொடுத்துள்ள முறைப்பாட்டில்,
வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியில் வசித்து வந்த 32 வயதான அ. அபிராமி என்னும் பெயருடைய தனது மனைவி, பிள்ளைகளான கம்சனா (வயது 11), சன்சிகன் (வயது 08) ஆகிய இருவரையும் கடந்த வியாழக்கிழமை பாடசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
எனினும், குறித்த இரு மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை என்றும், மனைவியும் வீடு திரும்பவில்லை என்றும், நானும், உறவினர்களும் பல இடங்களிலும் தேடிய நிலையில் அவர்கள் மூவரும் வீடு திரும்பவில்லை எனவும் கணவன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இவர்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் 076-5273860 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது வவுனியா பொலிஸாருக்கோ தெரியப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.