ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் ஜனாதிபதி தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், ஜனாதிபதி தேர்தலுக்கு மாத்திரம் வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் இருந்து பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்று (22) மாலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.