இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நிவித்திகல கல்வி வலயத்திற்குட்பட்ட எலபத, அயகம, கலவன ஆகிய கல்விப் பிரிவுகளிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் கடும் மலையுடனான காலநிலை காரணமாக நாளை (05) மூடப்படும் என சப்ரகமுவ மாகாண கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும் என மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் நிலவும் காலநிலையின் அடிப்படையில் பாடசாலைகளை மீள திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என சப்ரகமுவ மாகாண கல்வி அலுவலகத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.