2023 (2024) உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மறு பரிசீலனைக்கு செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இணைய அடிப்படை முறையின் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்புமாறு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை தாங்களாகவே பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி திகதி ஜூன் 19 ஆகும்.
பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இன் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.