கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
எனினும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நேற்று (08) இரவு 7.30 மணி முதல் இன்று (09) அதிகாலை 01.00 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டது.
மழையுடனான வானிலையுடன் கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் வீதியின் இருபுறங்களிலும் உள்ள ஆபத்தான கற்கள் மற்றும் மரங்கள் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமையே இதற்குக் காரணமாகும்.