கஹட்டகஸ்திகிலிய பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையின் தரம் 3 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக கஹட்டகஸ்திகிலிய ஆதார வைத்தியசாலையில் இன்று (12) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே 25 மாணவர்கள் உடல் அரிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்ப பாடசாலையின் 3C மற்றும் 3D வகுப்புகளில் பயிலும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3D வகுப்புக்கு உணவு வழங்கும் பெண் இன்று இல்லாததால் 3C வகுப்புக்கு உணவு வழங்கும் பெண்ணே 3D வகுப்புக்கும் உணவு வழங்கியுள்ளதாகவும் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருவதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.