இராணுவ வண்டி விபத்தில் இராணுவ வீரர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இராணுவ வண்டி விபத்தில் இராணுவ வீரர் பலி!


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் சம்பவ இஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.


குறித்த சம்பவம் முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் அதிகாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கப் வாகனம் முந்த முற்பட்டுள்ளது.


இதன்போது குறித்த கப் வாகனம் திடிரென இயங்காமல் நின்றுள்ளது. எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி விடும் எனும் அச்சத்தில் விபத்தை தடுக்கும் நோக்குடன் சாரதி பார ஊர்தியை செலுத்த முற்பட்டுள்ளார்.


இதன்போது, கப் வாகனத்தில் பாரஊர்தி மோதியதில் அதில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் வீதியில் விழுந்துள்ளனர்.


அதில் ஒருவர் மேல் பாரஊர்தி ஏறியதில் குறித்த இராணுவ வீரர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் அதில் பயணித்த 9 பேர் காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.


உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.


சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.