ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜேதாச ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) அணியினர், கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை தெரிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுல் கோட்டேயில் இன்று (21) நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை காரணமாக முன்னாள் அதிபர் சிறிசேனா கட்சித் தலைவராக செயல்படுவது தடைபட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகமான டார்லி வீதிக்கு எதிரே, கட்சி கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்ட குழுவினர் பொலிஸாரால் தடுத்ததையடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.