தந்தையை கொலை செய்ய உதவிய வெளிநாட்டு பிள்ளைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தந்தையை கொலை செய்ய உதவிய வெளிநாட்டு பிள்ளைகள்!


மாத்தறை பிரதேசத்தில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவன் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.


வெளிநாட்டில் பணிபுரியும் பிள்ளைகளின் வீடியோ அழைப்பு அறிவுறுத்தலின் பேரில் தாய் கொலையை செய்ததாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


வெலிகம தெனிபிட்டிய கொஸ்கஹஹேன பிரதேசத்தை சேர்ந்த பிரேமகுமார என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 2ஆம் திகதி இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த போது வீட்டிற்கு அருகில் உள்ள கம்பத்தில் மனைவியால் கணவன் கட்டி வைக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.


இறந்தவர் குடித்துவிட்டு வந்து தனது மனைவியை பலமுறை துன்புறுத்தியுள்ளார். மனைவி, அயல் வீட்டாரின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.


வீட்டின் முன் நாற்காலியில் அமரவைத்து விட்டு கணவனை கம்பத்தில் கட்டிவைத்தனர். இதற்கிடையில் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் வீடியோ அழைப்பு மேற்கொண்டு விடயங்களை கேட்டறிந்தனர்.


தொந்தரவு செய்யும் தந்தையைத் தாக்குமாறு தாயாரிடம் கூறியுள்ளனர். அதற்கமைய, மனைவி மற்றும் ஏனையோரால் கணவர் தாக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் வெலிகம வாலான அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எனினும், அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.


கழுத்தில் கட்டப்பட்ட கயிறு மாட்டிக் கொண்டதன் காரணமாக குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதுடன், உயிரிழந்தவரின் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஏனைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.