ஹிக்கடுவை பகுதியில் பெண் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை கைது செய்ய இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி வவுலகொட பிரதேசத்தில் சுற்றுலாப் பயணி தங்கியிருந்த வீட்டிற்கு சந்தேக நபர் பிரவேசித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் 760,000 பெறுமதியான பணம் மற்றும் இரண்டு ATM அட்டைகள் உட்பட பல பொருட்களை திருடியுள்ளார்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக சிசிடிவி காட்சிகளைக் கண்காணித்ததன் பின்னர் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறியும் பொதுமக்கள் 071 – 8591457 மற்றும் 091 – 2277222 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)