சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பங்களின் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட நபர்களின் பட்டியலைத் தயாரிக்க எதிர்பார்ப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த நபர்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் அபாயத்தை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
கடந்த வருடத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் ஓரளவு வளர்ச்சி காணப்படுவதாகவும் அமரசிங்க குறிப்பிட்டார்.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் இலங்கை முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 1,618 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இது 2023 ஆம் ஆண்டில் 1,639 ஆக காணப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டில் 1,232 பாலியல் சீண்டல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் அவ்வாறான சம்பவங்கள் 1,497 ஆக அதிகரித்துள்ளதாகவும் உதய குமார அமரசிங்க மேலும் தெரிவித்தார்.