
பாலிவுட் உலகமே இப்பொழுது ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் பங்கேற்றுள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. அதேபோல கோலிவுட் பிரபலங்கள் பலரும் ஆனந்த் அம்பானியின் திருமண வைபக நிகழ்வுகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உலக புகழ் பெற்ற பாடகி ரிஹான்னாவிற்கு சுமார் 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டு ஆனந்த் அம்பானியின் திருமண விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக அவருடைய நடனங்களும் பாடல்களும் கடந்த இரண்டு நாட்களாக ஆனந்த் அம்பானியின் திருமண வைபக நிகழ்வுகளில் அரங்கேறி வருகிறது. இந்த சூழ்நிலையில் பாலிவுட் உலகில் பிரபலமான நடிகை ஜான்வி கபூர் அவர்களும், பாடகி ரிஹானா அவர்களும் ஒன்றாக இணைந்து டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.