இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று (24) நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால்மா பொதி ஒன்றின் விலையை 150 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.