
அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலை, கலமெடியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற நெல் அறுவடை நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.