இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார், லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து அனுராதபுரம் திரப்பனை பகுதியில் இன்று (14) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த மூவரும் லொறியின் சாரதியும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளடன் லொறியும் வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.